By Miss.Sifna, Sammanthurai, Sri Lanka
மங்கையர்க்கு,மாலையிடும்
காளையர்க்கு-வேண்டுமாம்
சீதனம்.........!
சிறையினிலே,தவிக்கும்
பறவைகளாய்-பாவைகள்
கையிருந்தும் -காளையர்
ஊணப்பிறவிகளைய்-.......!
கரும்புதிண்ண கைக்கூலி
சேவைக்காறியிடம்
கூலிவாங்கும்-மகான்கள்
இது மானுட குலத்தின்
சாபமன்றோ........!!
அழகுவேண்டும்,அறிவுவேண்டும்
சீரும்வேண்டும்........!
இந்தணைக்கும்
மகான்களே-உங்கள்
மதியிணைதிறந்து..........!
மனதைதொட்டு-நீங்கள்
கண்ணாடியில்-உமது
முகத்தைபாருங்கள்-இது
நியாயமா என்று......!
உங்கள்
முதுகை,தொட்டுப்பாருங்கள்
முள்ளந்தண்டு இருக்கிறதா?
உங்களுக்கு..........
சீதனம் வாங்காத மகளிர் சங்கம் (sifna)
Wednesday, 9 March 2011
Tuesday, 8 March 2011
ஒரு திருமணம் முழுமை பெற தேவையானவைகள்
மணமகன், மணமகளின்றி
1. மணமகளுக்காக ஒரு பொறுப்பாளர் (வலீ)
2. இருநீதமுள்ள சாட்சிகள்
3. மணமகளின் முழுமையான சம்மதம்
4. மணமகளின் உரிமையான மஹர் தொகை
நபி (ஸல்) கூறினார்கள்: எந்த ஒரு பெண் தன் பொறுப்பாளர் (வலீ) அனுமதியின்றி திருமண சம்மதம் தெறிவிக்கிறாளோ அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது, அத்திருமணம் செல்லாது. அப்பெண்ணுடன் உடலுறவு கொள்வதை மஹர் தொகை அனுமதிக்கிறது. எவளொருவளுக்கு வலீயில்லையோ அவளுக்கு அரசர் வலீயாவார். அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி), ஆதாரங்கள்: அபூதாவூத், திர்மிதி.
நபி (ஸல்) கூறினார்கள்: ஒரு (மணப்) பெண்ணை மற்றொரு பெண் (வலீயாக இருந்து) மணம் செய்விக்கக் கூடாது. மணப்பெண் தன்னையே (வலீயின்றி) மணம் செய்தல் கூடாது. அறிவிப்பு: அபூஹூரைரா (ரலி) ஆதாரங்கள்: இப்னுமாஜா, தாரகுத்னி, பைஹகி
மணப்பெண்ணின் முழு சம்மதம் தேவை
ரசூல் (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்:'அயிம்மா' (விதவை, விவாக முறிவுப் பெற்ற) பெண்களை அவர்களது முழு சம்மதமின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள், பாகிரா (கன்னிப்) பெண்களிடம் திருமணம் விஷயமாக அனுமதி பெற வேண்டும். அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப்பெண் (நாணத்தால் தன் எண்ணத்தைக்) தெளிவாகக் கூற வெட்கப்படுவாளே! என சிலர் வினவினார்கள்.
அதற்கு ரசூல் (ஸல்);: 'அவளது மௌனமே சம்மதமாகும்' என்றார்கள்.அறிவிப்பு: ஆயிஷா, இப்னு அப்பாஸ், அபூஹூரைரா (ரலி அன்ஹூம்), ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்
அல்லாஹ் அறிவுறுத்துகிறான்: 'இறை நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப்பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது.' (அல்குர்ஆன் 4:19)
நபித்தோழி கன்சா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனது தந்தை கிதாம் (ரலி) அவர்கள் எனது (முழு சம்மதமின்றி) எனக்குப் பிடிக்காத இடத்தில் திருமணம் செய்து வைத்தார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இதனைக் கூறியபோது அத்திருமணத்தை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். ஆதாரங்கள்: முஅத்தா மாலிகி, மபகாரி, அபூதாவூத், நஸயீ, தாரமி,
இதற்குப் பின் கன்சா (ரலி) அவர்கள் தனது முழு சம்மத்ததுடன் நபித்தோழர் அபூலுபாமா (ரலி) அவர்களை மணமுடித்ததாக அப்துல் ரஹ்மான் பின் யஜீத் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஹர் கொடுத்து மணம் முடியுங்கள்
அல்லாஹ் ஆணையிடுகின்றான்: நீங்கள் (மணம் புரியும்) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக்கொடை) மகிழ்வோடு கொடுத்துவிடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதை தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் 4:4)
மணம் முடிக்கும் மணப்பெண்ணுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படி கொடுத்து விடுங்கள். (அல்குர்ஆன் 4:24,25)
மணம் முடிக்கும் பெண்ணுக்கு ஒரு பொற்குவியலையே (மஹராக) கொடுத்த போதிலும், அதிலிருந்து எதனையும் (திரும்ப) எடுத்துக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:20)
நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த போது, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) என்ற நபித்தோழர் பேரித்தம் பழமளவு தங்கத்தை மஹராகக் கொடுத்து ஒரு மதீனத்து பெண்ணை மண முடித்தார்கள். அறிவிப்பு: அனஸ் பின் மாலிக் (ரலி). ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி..
ஒரு இரும்பு மோதிரத்தையாவது மணப்பெண்ணுக்கு மஹராகக் கொடுத்து மணம் முடியுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆணையிட்டார்கள் (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி
ஒரு நபித் தோழரிடம் மஹராகக் கொடுக்க எந்த பொருளும் இல்லாததை அறிந்த ரசூல் (ஸல்) அவர்கள் 'உனக்கு எதாவது திருக்குர்ஆன் வசனங்கள் தெரியுமா? எனக் கேட்டார்கள். அந்நபித்தோழர், தனக்கு இன்னின்ன குர்ஆன் வசனங்கள் தெரியுமென விடையளித்தார்கள். உடனே அந்த வசனங்களை மணப்பெண்ணுக்கு கற்றுக் கொடுப்பாயாக! அது அப்பெண்ணுக்குரிய மஹராகும்' என்றார்கள். அறிவிப்பு: ஸஹல் பின் ஸஅத் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, தாரமி, திர்மிதி
போர் கைதியாக பிடிக்கப்பட்ட ஸஃபிய்யா என்ற யூதப் பெண்ணை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை போர் கைதியிலிருந்து விடுவித்தலே அவருக்கான மஹராக இருந்தது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ, திர்மிதி..
மஹர்-திருமணக்கொடை-மணப்பெண்ணின் தனி உரிமை. அதில் தலையிடவோ, அதற்கு வரையறையிடவோ எவருக்கும் உரிமையில்லை. ஒரு மணப்பெண் ஒரு பொற்குவியலைக் கூட தனக்கு மஹராக கேட்க உரிமையுண்டு. (பார்க்க: அல்குர்ஆன் 4:20)
நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: ஒரு பெண் அவளது அழகு, செல்வச்செழிப்பு, குடும்ப கௌரவம், மார்க்கப்பற்று என்ற நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகிறாள். மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே மணமுடித்து வெற்றி பெறுவீராக! அறிவிப்பு: அபூஹூரைரா, அபூஸயீத் அல்-குத்ரி, ஜாபிர் (ரலி-அன்கும்), ஆதாரங்கள்: புகாரி, முஸலிம், அபூதாவுத், தாரமி, நஸயீ, இப்னுமாஜா.

Monday, 7 March 2011
சம்மாந்துறை முழு இலங்கை முஸ்லீம் பிரதேசங்களுக்கும் ஒரு முன்மாதிரியான ஊர்
எழுதியவர் - சம்மாந்துறை சிப்னா,
சீதனத்தை எதிர்க்கும் மகளிர் சங்கத்துக்காக
சம்மாந்துறை முழு இலங்கை முஸ்லீம் பிரதேசங்களுக்கும் ஒரு முன்மாதிரியான ஊர் என்ற பெயரைப்பெறும்போதெல்லாம் நாம் அதன் முக்கியத்துவத்தை அறிந்து பெருமையடைகின்றோம். ஆனாலும் சீதனம்/கைக்கூலி விடயத்தில் அது இன்னமும் சீர்திருத்தக் காலகட்டத்திலேயே இருந்துகொண்டிருக்கிறது. மட்டுமல்ல, அதனை ஒழிப்பதற்கான செயற்திட்டங்களின் வேகமும் மந்தகதியிலேயே காணப்படுகின்றன என்பதுவே கவலைக்குரியவிடயமாகும்.
எந்தவொரு சமூகத்தீங்கையும் ஒழிப்பதற்கு படிமுறையைக் கையாழவேண்டும் என்பது அல்குர்ஆன் நமக்குக் கற்பிக்கும் பாடம்.
சீதனம்/கைக்கூலியை சம்மாந்துறை உலமாக்கள் பிழையென்று கண்டறிந்ததும், பின்னர் அதற்காக தங்களது அறிவுத்தரம், சமூகத்தில் காணப்படும் அவர்களுக்கான மேலாதிக்க சக்தி என்பவற்றிற்கேற்ப அவர்கள் அவ்வப்போது முன்னெடுத்த தீர்மானங்கள், திட்டமில்கள். பிரச்சாரங்கள் என்பவற்றையும் அது கொண்டுவந்த சாதகமான விளைவுகளையும் நாம் மறந்துவிடமுடியாது. இவையெல்லாம் சம்மாந்தறைக்கு இஸ்லாமிய இயக்கங்களும், பிரசார நிறுவனங்களும் உருவாவதற்கு முன்னர் ஏற்பட்டவை.
மாப்பிள்ளையின் பின்னால் அவரது உறவினர் ஒருவர் தட்டு ஒன்றுடன் நின்றுகொண்டு மாப்பிள்ளைக்கு வழங்கப்படும் பணம் வைக்கப்பட்ட என்வலெப்களை வாங்கி அதனுள் இட்டு பின்னர் அவையனைத்தையும் வழங்கப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலுடன்; சபையில் வாசித்துக்காட்டி குறைந்த தொகை வழங்கியவர்களை கேவலப்படுத்தும் இந்த நடைமுறையிலிருந்து நமது மக்களை மீட்டு மானங்காத்தது சம்மாந்துறை (தவ்ஹீத்)உலமாக்களையே சாரும்.
ஆனால் சக்திமிக்க ஆற்றல்கொண்ட இஸ்லாமிய தஃவா ஜமாத்அமைப்புக்கள் சம்மாந்தறையில் உருவானதன்பின்னர், அவர்கள் இந்தப்பிரச்சினைக்கு எந்தப்பெறுமானம் கொடுத்தார்கள் அல்லது கொடுக்கிறார்கள் என்பது இன்னமும் அவர்களால் விரிவாகவும் தெளிவாகவும் முழு ஊருக்கும் முன்வைக்கப்படவில்லை என்பதை நான் இங்கு தீர்க்கமாகவே சுட்டிக்காட்டுவேன். சம்மாந்துறை (தவ்ஹீத்) சீதனம்/கைக்கூலிக்கெதரான பிரச்சார நடவடிக்கை திருப்திகரமானளவிற்கு மேற்கொள்ளப்படுகிறது என்பதும் அதனடியாக பாரிய பல மாற்றங்கள் சில தனிப்பட்ட சகோதரர்களின் தியாகங்களினால் ஏற்படுவதையும் சம்மாந்துறையில் நிறையவே காணக்கூடியதாகவிருக்கிறது. ஆனால் அவ்வமைப்புக்களின் கட்டமைப்பில் கோட்பாட்டுரீதியாகவும் குறிப்பாக அங்கத்தவர்களை உள்ளீர்க்கும் சந்தர்ப்பங்களில் அவர்களை இஸ்லாமிய வாழ்வுநோக்கிய பயிற்றுவித்தலில் இதற்கு எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதும் இன்னமும் தெளிவற்ற ஒன்றாகவே இருக்கிறது. விதிவிலக்காக, இதனை கோட்பாட்டு ரீதியாகவும் தமது அங்கத்தவர்களுக்கு மத்தியில் சாத்தியமானவரையில் நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் விதத்திலும் ஒரு அமைப்பு இருந்தது என்பதையும் என்னால் தெளிவாக குறிப்பிடமுடியும்.
இப்படிக்கு :-
சீதனத்தை எதிர்க்கும் மகளீா் சங்கம் (sifna)

Subscribe to:
Posts (Atom)